இட்டமொழி, நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள வடக்கு இளையார்குளத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரெஜினா. இவர்களுக்கு பாலகிருஷ்ணன்(. இதில் பாலகிருஷ்ணன் குசவன்குளத்தில் உள்ள டிடிடிஏ தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறான்..நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் 2 குழந்தைகளையும் அர்ச்சுனனும், அவரது மனைவியும் படுக்க வைத்தனர். அப்போது அவர்களது வீட்டுச்சுவர் இடிவதை பார்த்த, ரெஜினா 2-வது குழந்தையை முதலில் தூக்கி கொண்டு வீட்டிற்கு வெளியே ஓடினார். அதற்குள் சுவர் இடிந்து விழுந்ததில் மூத்த குழந்தையான பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தான்..உடனடியாக அவனை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.