தமிழக வேளாண் அமைச்சர் வினோத் தனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பேசியுள்ளார். தமிழ்நாட்டில் தான் சந்தித்த முதல் தேர்தலிலே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் ஆவார்கள். அரசியலுக்கு புதியதான இவர்களில் அமைச்சரவையில் இடம்பிடித்த பலரும் இளைஞர்களாகவே உள்ளனர். வேளாண் அமைச்சர்: தமிழ்நாட்டில் வேளாண்துறை அமைச்சராக வினோத் பொறுப்பு வகித்து வருகிறார். டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர் தான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று மனம் திறந்து பேசியுள்ளார்.