இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தி இவ்வளவு பேசும் இந்த அரசு, நூலகம் திறக்கும் முன் வந்த நூல்களை சரிபார்த்திருக்க வேண்டாமா? - எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமிSource : social media பெரியார் அறிவுலக ஊழல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட "பெரியார் அறிவுலகத்தில்" நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.