IND vs NZ 2nd ODI: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி மழை காரணமாக 47 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்திற்குச் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரைக் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று வெலிங்டனில் தொடங்கியுள்ளது. இந்தியா பவுலிங்: மழை காரணமாக இந்த போட்டி 47 ஓவர் கொண்ட ஆட்டமாக நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்த போட்டியில் பந்துவீச்சாளர் அக்யூப் நபி அசத்தலாக பந்துவீசி வருகிறார்.