சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காகவும், கோயில் நிகழ்வுகளை எளிதில் அறியும் வகையிலும் புதிய இணையதளத்தை கோயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. புது இணையதளம் அறிமுகம் சபரிமலையில் வருகிற 16-ஆம் தேதி கோயில் நடைத்திறக்கப்பட உள்ள நிலையில்,17-ஆம் தேதிமுதல் மகரவிளக்கு சீசன் தொடங்குகிறது. இதனையடுத்து சபரிமலை சீசனின் முக்கிய நிகழ்வுகளான மண்டல பூஜை டிசம்பர் 27-ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தகவல்களையும் பெறும் வகையில் புது இணையதளத்தை ஆலய நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே இணையதளத்தில் அனைத்து சேவைகள் sabariportaldcpta.