3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தமிழகத்தில் இன்று திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடுமெனவும், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கிய பிறகு இரண்டு புயல்கள் உருவாகி கரையை கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது.