சோதனையில் அளவுக்கு அதிகமான எத்தனால் கலப்பு கண்டறியப்பட்டதாக குற்றச்சாட்டு: மத்திய அரசு பதிலளிக்க கோரிக்கை. E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலக்கப்பட்டதாக வெளியான விவரம் வாகன ஓட்டிகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலந்து, வாகன எரிபொருளாக உபயோகிப்பதே E-20 பெட்ரோல் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் E-20 பெட்ரோலில் அளவுக்கு அதிகமாக எத்தனால் கலக்கப்படுவதாக கர்நாடக மாநில அரசுத்தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் செயல்படும் பெட்ரோல் பங்குகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, எண்ணெய் நிறுவனங்களின் ஆய்வகங்களுக்கே அனுப்பி சோதனை செய்ததாகவும், முடிவுகளில் தெளிவின்மை காரணமாக அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களில்.