தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரத்தில் கமல்ஹாசன் காட்டம். போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும் என்று பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரம் தொடர்பாக எம்பி கமல்ஹாசன் காட்டமாக தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தை கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திறந்துவைத்தார். இந்நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன், பெரியார் அறிவுலக புத்தகக்கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.