முதன்மை விசா வகைகளின் எண்ணிக்கையை 13-லிருந்து 9-ஆகக் குறைக்க மத்திய அரசு முடிவு. விசாவுக்கு எளிமையான அணுகுமுறை இந்தியாவில் விசாவுக்கான நடைமுறைகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில், முதன்மை விசா வகைகளின் எண்ணிக்கை 13-லிருந்து 9-ஆகக் குறைக்கப்பட்டு, விசாக்கான முக்கியப் பிரிவுகளை 13-இல் இருந்து 9-ஆகவும், துணை பிரிவுகள் 23-ஆக குறைக்கவும், விசா விண்ணப்பத்தில் நிரப்பும் பகுதிகளை 70 சதவீதம் அளவுக்கு குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.