திருநெல்வேலி அருகே பெண் காவலருக்கு பாலியல் தொல்லையளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரே பாலியல் தொல்லையளித்த கொடூரம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக திருநெல்வேலியில் இருந்து போலீசார் சென்றுள்ளனர். பாதுகாப்புப் பணிகளை முடித்துவிட்டு, காவலர்கள் இரவு வேனில் திருநெல்வேலிக்கு திரும்பியுள்ளனர். அப்போது அவ்வாகனத்தில் பயணித்த மேலப்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், தனக்கு முன்பாக இருக்கையில் அமர்ந்திருந்த பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லையளித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிர்ச்சிக்குள்ளான பெண்காவலர், வாகனத்திலேயே சிறப்பு உதவி ஆய்வாளரை கண்டித்து தாக்கியதாகவும் தகவல் வெளியாகியது. காமுக எஸ்.எஸ்.