சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம் - 16 இடங்களில் பயணிகள் ஏறும் வசதி. தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கணக்கான மக்கள் சொந்த் ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வர். இந்நிலையில் நாளை முதல் விடுமுறை என்பதால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். 5 இடங்களில் இருந்து புறப்படும் பேருந்துகள் ஒரே இடத்தில் பேருந்துப்பயணத்துக்காக பயணிகள் குவிவதை தடுக்கும் நோக்கில் 5 இடங்களில் இருந்து பேருந்துகளை தமிழக அரசு இயக்கிவருகிறது. தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.