Gold Rate Today (06-11-2026): நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம். தங்கம் விலை அக்டோபர் மாதத்தில் சரசரவென குறைந்து வந்த நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை காரணமாகவே இந்த விலை உயர்வு என கூறப்படுகிறது. அதன்படி, 1-ம் தேதி ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும், 2-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கும் விற்பனை செய்யப்பட்டது.