கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டை முருகன் கோவில் செல்லும் வழியில், நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார். அந்த கடைக்கு அருகிலேயே, ராஜேஸ்வரி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். அதே பகுதியில், வெல்டிங் கடை, ஹோட்டல்,வாட்டர் கம்பெனி மற்றும் குடியிருப்புகள் இருந்துள்ளன. ரவி, வழக்கம் போல் பட்டாசு குடோனில் பட்டாசுகளை பேக்கிங் செய்துள்ளார். அப்போது அவரது மனைவி ஜெயஸ்ரீ, குழந்தைகள் ருத்திகா,ருத்தீஸ் ஆகியோர் இருந்துள்ளனர். இன்று காலை,9:30 மணி அளவில் திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்த பட்டாசு குடோனில் வெடிகள் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்துள்ளது.