பழனி முருகன் கோவிலில் தங்க ரதப் புறப்பாடு கட்டணம் மற்றும் பிரசாதங்களின் விலை திடீரென உயர்த்தியிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி (பைல் படம்)Source : ABPLIVE AI முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை அமைந்துள்ளது. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.