முதல் கட்டமாக 30 தொகுதிகளை சேர்ந்த மாணவச்செல்வங்கள் விருது பெற உள்ளதாக அறிவிப்பு. 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நாளை நடைபெறும் தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான விஜய் ஆண்டுதோறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை நேரில் அழைத்து விருது வழங்கிப் பாராட்டி வருகிறார்.