ஹுண்டாய் நிறுவனத்தின் எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே விரிவாக காணலாம். ஹுண்டாய் கார்Source : twitter இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனம் ஹுண்டாய். இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், மாதாந்திர தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நவம்பர் மாதத்திற்கான தள்ளுபடியை ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹுண்டாய் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் இந்த Hyundai Creta . இந்த காருக்கு ரூபாய் 1.20 லட்சம் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.