வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இனிப்புகள் வழங்கி வரவேற்பது முதல், உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு பெட்டிகளைப் பரிசாக வழங்குவது வரை தீபாவளி கொண்டாட்டத்தில் இனிப்புகள் முக்கிய இடம்பிடிக்கின்றன. திருச்சி இனிப்புகள் ஏற்றுமதி உயர்வுSource : Abpnadu Original திருச்சி: திருச்சியில் இருந்து இனிப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்படுவது 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய இனிப்புகளுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு அதிகரித்து வருவது இந்த வளர்ச்சியின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் என கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. அதிலும் இனிப்புகளுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.