ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஆஃப்கானிஸ்தான் அணி 6வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. உலகில் கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கு நிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தமட்டில் பல நாடுகள் விளையாடி வருகின்றனர். ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடி வருகின்றனர். ஆஃப்கானிஸ்தான் அசத்தல்: ஆப்கானிஸ்தான் அணி சமீபகாலமாகவே கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். சமீபகாலமாக அவர்கள் கிரிக்கெட் விளையாடினாலும் உலகளவில் அனைத்து அணிகளின் கவனத்தையும், அனைத்து அணிகளுக்கும் அச்சுறுத்தல் நிறைந்த அணியாக திகழும் அணியாக உருவெடுத்துள்ளது.