முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் மூவர் கொண்ட உயர்மட்டக்குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு. சிறைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அண்மையில் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், நாட்டின் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர்நிறைக் குழு ஒன்றை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.