மதுரை,மதுரை அருகே சமயநல்லூரில் பிரபல ரவுடி ஒருவரை மர்மக் கும்பல் முகத்தைச் சிதைத்து கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள். இவர் அப்பகுதியில் 'குட்டிசாக்கு' என்ற பெயரில் பிரபல ரவுடியாக அறியப்பட்டார். இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன..சரமாரி வெட்டுஇந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்திற்குள் சூர்யா சென்றுள்ளார். அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் அவர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.