உயிர்த்தியாகத்தின் விளைவாக பிரிக்கப்பட்ட மொழிவாரி மாநிலங்கள்: எளிதில் கிடைத்ததா தமிழ்நாடு எனும் பெயர்? எது தமிழ்நாடு நாள் என்ற கேள்வியும், அது தொடர்பான விவாதங்களும் இன்றளவும் ஓய்ந்தபாடில்லை. தமிழ்நாடு நாளை கொண்டாடுவதில் இருக்கும் முரண்பாடு என்ன? ஆட்சிக்கு வந்த கட்சிகள் எதனை மேற்கோள் காட்டி தமிழ்நாடு நாளை அறிவித்தன என்பதை விரிவாக பார்க்கலாம். நவம்பர்.1 ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என தமிழக அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது. முதன்முதலில் 2019-ஆம் ஆண்டு அப்போதைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழக நிலப்பரப்பு அங்கீகரிக்கப்பட்ட நாளை தமிழ்நாடு நாள் என அறிவித்தார்.