துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வருகையின் போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அடுத்தடுத்து மின்தடை ஏற்பட்ட விவகாரத்தில் கோயில் பொறியாளர் சஸ்பெண்ட்! - madurai meenakshi temple power cut. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது அடுத்தடுத்து மின்தடை ஏற்பட்ட விவகாரத்தில் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அவரது வருகையை முன்னிட்டு கோயிலின் கிழக்கு வாசல் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.