Delhi Anti-CEC Rally: தலைமைதேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று டெல்லியில் நடைபெறும் பேரணியில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Delhi Anti-CEC Rally: டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பேரணிக்காக நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லி இன்று ஒரு மாபெரும் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் இன்று ராம் லீலா மைதானத்தில் திரள வாய்ப்புள்ளதாம்.