Tamil Nadu Weather Update (01-11-2026): மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதியில் இன்று கடுமையான புயல் உருவாக அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. Tamil Nadu Weather Update (01-11-2026): தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்ற வானிலை மையத்தின் எச்சரிக்கை கீழே விவரிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுப்படி அட்சரேகை 10.9°N மற்றும் தீர்க்கரேகை 87.5°E அருகே மையம் கொண்டிருந்தது.