சென்னை: முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின்கீழ் நகர்ப்புற உள்ளாட்சிகளில் ரூ.376.65 கோடியில் 2,880 திட்டப் பணிகளை மேற்கொள்ள நிர்வாக. முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ், நகர்ப்புற உள்ளாட்சிகளில் வெளிப்படையாகவும், சிக்கனமாகவும் திட்டப் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தலைமையில் பொது திட்ட அனுமதி மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பு அதிகாரியாக தமிழ்நாடு நகர்ப்புற நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் செயல்படுகிறார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். .