Dearness Allowance: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. அரசு பல திட்டங்களை அறிவித்தாலும் அந்த திட்டங்கள் மக்களை சென்றடைய அரசு ஊழியர்களின் பணி முக்கியமானது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மற்றும் மாநில அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு, சம்பளம், நலன்கள், ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படுகின்றன.