Murasu Cyclone: அர்னாப்பை தொடர்ந்து முரசு புயல் உருவாகும் சூழல் நிலவி வரும் நிலையில் தமிழகத்தில் பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வந்தன. இதனிடையே அர்னாப் புயல் உருவானதை அடுத்து தமிழகத்தில் பெரிய பாதிப்பு இருக்குமோ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆந்திராவில் 140 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசி தும்சம் செய்தது மட்டுமல்லாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆனால் தமிழகத்தில் இந்த புயலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.