சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படக்கூடாது - முதல்வர். பணியின்போது அலட்சிலப்போக்கிலும், கவனக்குறைவாகவும் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சிறைத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். 17 கைதிகள் தப்பியோடிய விவகாரம் தேனி அருகே மாவட்ட சிறையிலிருந்து கடந்த 26-ஆம் தேதி ஒரே நேரத்தில் 17 கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அனைத்து கைதிகளும் பிடிபட்ட நிலையில், இவ்விவகாரம் சிறைத்துறை மற்றும் தவெக அரசு மீதான கடும் விமர்சனத்திற்கு வழிவகுத்தது.