சில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் இடையே நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில மணி நேரங்களுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயலுக்கு முரசு எனும் பெயர் சூட்டத்திட்டம் அந்தமான் அருகே புதிதாக புயல் உருவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்புயலுக்கு இந்தியா பரிந்துரைத்துள்ள முரசு எனும் பெயர் சூட்டப்பட உள்ளது.