Chennai Power Shutdown (31-10-2026): சென்னையில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை என்பதை பார்க்கலாம். தலைநகர் சென்னையில் நள்ளிரவில் மின்தடை ஏற்படுவதாக கூறி அவ்வப்போது பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தடையில்லாத மின்சாரம் வழங்குவதற்காக மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின்தடை செய்யப்படும் நேரத்தில் மின்வயர் செல்லும் பாதையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுதல், சிறு சிறு பழுதுகளை சரி செய்து உள்ளிட்ட பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.