Guru Peyarchi 2026: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். ஆனால், மிதுனம், கன்னி உள்ளிட்ட ராசியை சேர்ந்தவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குரு பகவான் நவகிரகங்களில் முக்கிய கிரகங்களில் ஒன்று. ஞானம், ஒழுக்கம், தர்மம், கல்வி மற்றும் செல்வம் ஆகியவற்றிற்கு அதிபதி. குறிப்பாக, குரு பெயர்ச்சி என்றாலே எந்த ராசிகளுக்கு அதிஷ்டம் கொட்டப்போகிறது. யாருக்கெல்லாம் போதும் போதும் என்ற அளவுக்கு கஷ்டத்தை கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரிக்கும். குரு பெயர்ச்சி குறிப்பாக குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக சுமார் 1 வருடம் அதாவது (12 மாதங்கள்) எடுத்துக் கொள்கிறார்.