Magalir Urimai Thogai: தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் விஜய் மகளிருக்கு ரூ.2500 எப்போது வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ் வெளியாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில் இந்த திட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. தங்களுக்கு ரூ.1000 கிடைக்கவில்லை என்று பெண்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதை அடுத்து பின்னர் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டது. இந்த திட்டம் 2023ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.