பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை இன்று (அக்.30) நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவர் குரு பூஜையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவது வழக்கம். குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.ஆனால், இந்த ஆண்டு பசும்பொன்னில் நடைபெறும் குரு பூஜையில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.