மருத்துவம் பயின்ற தமிழ்நாட்டுக் கேடருக்கு ஐஏஎஸ் ஆக தேர்வாகி பணியாற்றும் மோனிகா ராணா. சமீபத்தில் 19 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தப்பட்டியலில் அதிகம் கவனிக்கப்பட்ட பெயர் மோனிகா ராணா ஐஏஎஸ். தென்காசி மாவட்டத்தின் 8-வது மற்றும் முதல் பெண் ஆட்சியராக மோனிகா ராணா பொறுப்பேற்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் 1990-ஆம் ஆண்டு பிறந்த இவர், சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.