Thirupathur Kanthili Lorry Driver arrested for murdering an elder man in illicit relationship issue. திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே கள்ளக்காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை தட்டி கேட்ட முதியவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்றதாக லாரி ஓட்டுநர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.கந்திலியை அடுத்த டி. வீரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கரியன் மகன் நந்தியப்பன் (50) என்பவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ரோஜா என்கிற பெண்ணுக்கும், நந்தியப்பனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி உள்ளது.