தமிழக அரசின் அவுட்சோர்சிங் நியமனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக போலிக் கொந்தளிப்பில் குதிப்பதாக தவெக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஒப்பந்த பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை Outsourcing முறையில் தேர்வு செய்து வழங்க, தமிழக அரசின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான OMCL நியமிக்கப்பட்டுள்ளது.