அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல். ஒருவர் தனது நிதி நிலையை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செலவழிக்க வேண்டும். ஆடம்பரத்திற்காக கடன் வாங்குவது பெரும் நிதி நெருக்கடிக்குத் தள்ளும் என்று உலக சிக்கன தினத்தையொட்டி முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தியில், சிக்கனம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் நாள் உலக சிக்கன நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சிக்கனத்தின் சிறப்புக் குறித்து அய்யன் திருவள்ளுவர் அவர்கள். ‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்' என்ற குறளில்.