முதல்வர் கோணலாக மூஞ்சை வைத்துக் கொண்டு உட்காந்திருக்கிறார். ஆணையரின் முகம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால். சென்னை ரிப்பன் பில்டிங்கில் இந்த மாதத்திற்கான மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் அதியமான் முதல்வர் விஜய்யை 'கோணல் மூஞ்சி' முதல்வர் என கடுமையாக விமர்சித்திருக்கிறார். .105 வது வார்டு திமுக கவுன்சிலரான அதியமான தனது வார்டில் மழைக்கால முன்னேற்பாடு பணிகள் நடக்கவில்லை என அரசை குற்றஞ்சாட்டி போஸ்டர் அடித்திருக்கிறார். இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. .இதைக் கண்டித்து திமுக கவுன்சிலர் சிற்றரசு உரையாற்றினார்.