சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.அதாவது வாரத்தின் தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் அதிகரித்து காணப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,085க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,04,680க்கும் விற்றது. வெள்ளி விலையில் நேற்று முன்தினம் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.220க்கும், பார் வெள்ளி ரூ.2.