சென்னை,சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் பிரதான சாலைகள், பஸ் போகும் சாலைகள், தெரு சாலைகள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இவற்றின் நீளம் சுமார். இவற்றின் நீளம் சுமார் 1000 கிலோ மீட்டர் ஆகும். தற்போதைய மழையால் 8,110 இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாகி விட்டதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 5,350 இடங்களில் சீரமைப்பு பணிகள் நடந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மேடு பள்ளங்கள் தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.