சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக கடைகள் அமைக்க இடம் ஒதுக்கித்தர உத்தரவிடக் கோரி, சென்னை பட்டாசு முகவர். அப்போது, உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் இ-டெண்டர் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அக்.23-ம் தேதி டெண்டர்கள் திறக்கப்பட்டதாகவும், 2 டெண்டர்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டு, அதில் சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கத்துக்கு இ-டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தீவத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக, டெண்டர் ஒதுக்கீட்டு உத்தரவுகளை உடனே வழங்க வேண்டும் என, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்..