ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வர்த்தக தினங்களில் ஏற்ற இறக்கமின்றி அமைதி காத்தது. நேற்று வெகுவாக குறைந்தது. ஆனால், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அக்ஷ்ய திருதியை புதன்கிழமை வரும் நிலையில், முந்தைய நாளான இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.62 குறைந்து ரூ.8,940 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.496 குறைந்து ரூ.71,520 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.68 குறைந்து ரூ.