ராபர்ட் கிளைவ் பேரரசுகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதைத் தனது மன உறுதி மற்றும் துணிச்சலான செயல்கள் மூலம், எடுத்துக் காட்டினார். மூத்த வில்லியம் பிட் (பின்னாள் பிரதமர்), நாடாளுமன்ற மக்களவையில் அவரை ' விண்ணுலகில் பிறந்த தளபதி' என்று பாராட்டினார். துணிச்சலும் சாகச உணர்வும் கொண்டிருந்த கிளைவ் அதீத பேராசை கொண்டவராகவும் இருந்தார். போலி ஆவணங்களைத் தயாரிக்கவோ அல்லது பொய்யுரைக்கவோ அவர் எப்போதும் தயங்கியதில்லை. இங்கிலாந்தில் ஒரு சிறந்த ராணுவ வீரராக பார்க்கப்படுகிற அதே நேரம் இந்தியாவில் அவர் கொள்ளையராகவும் நாட்டின் செல்வங்களைச் சூறையாடியவராகவும் பார்க்கப்படுகிறார்.