கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கவுள்ளதாகக் கூறப்படும் படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடியை எட்டும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால் நடிகர்களின் சம்பளம் , படத்தின் பட்ஜெட் ஆகியவற்றை கருத்தில் கொள்கையில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதில் மிகப்பெரிய சவால் இருப்பதாக தெரிகிறது . 47 ஆண்டுகளுக்குப் பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்கள். ரெட் ஜெயண்ட் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ முன்னதாக வெளியாகியது.