அடுத்தாண்டு நடைபெற உள்ள மகளிர் ப்ரிமீயர் லீக் தொடருக்காக ஆர்சிபி அணி தற்போது வரை 4 வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் இருப்பது போலவே மகளிர் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்துவதற்காக நடத்தப்படும் டபுள்யூபிஎல் கிரிக்கெட் தொடரும் மிகவும் பிரபலம் ஆகும். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் மும்பை, ஆர்சிபி ஆகிய அணிகள் மகளிர் பிரிமீயர் லீக்கிலும் பங்கேற்று வருகிறது. ஆர்சிபி: ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணிக்கு எப்படி ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ, அதேபோல மகளிர் பிரிமீயர் லீக்கிலும் ஆர்சிபி அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.