17 ஓவரில் இரண்டு விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி இந்திய மகளிரணி அசத்தல் வெற்றி. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி-20 போட்டித்தொடரை இந்திய அணி 3-க்கு 0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டித்தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய மகளிரணி அபார வெற்றிபெற்றது. 3-வது போட்டியிலும் வெற்றிக்கொடி நாட்டிய இந்தியா இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்றது. டாஸ்வென்று முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 39.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது.