கொச்சியில் இன்று நடந்த ஏலத்தில் 6 வீராங்கனைகளை எடுத்த மும்பை அணிக்காக அடுத்தாண்டு பங்கேற்க உள்ள 18 வீராங்கனைகள் அடங்கிய முழு பட்டியல் வெளியாகியுள்ளது. மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை கொண்ட அணி மும்பை இந்தியன்ஸ். ஹர்மன்ப்ரீத்கவுர் தலைமையில் மிகவும் ஆக்ரோஷமான அணியாக ஆடி இரண்டு முறை கோப்பையை வென்ற மும்பை அணி அடுத்தாண்டு நடைபெறும் டபுள்யூபிஎல் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ்: இன்று நடந்த ஏலத்திலும் வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்க போட்டா போட்டி மும்பை அணி நிர்வாகம் நடத்தியது.