Ulundurpet Goat Sales Surge at 3 AM, Traders Rejoice in Kallakurichi and Nellai Ahead of Diwali. கள்ளக்குறிச்சி: தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள் மட்டுமல்ல, பல வீடுகளில் அசைவ விருந்தும் முக்கியம். இதனால் பண்டிகைக்கு முன்பாக ஆட்டுச் சந்தைகளில் விற்பனை எப்படி இருக்கும் என்று சொல்லவே வேண்டாம். அந்த வகையில் கள்ளக்குறிச்சி, நெல்லை மாவட்டங்களில் ஆடு விற்பனை ஜரூராக நடந்துள்ளது.. அதிலும் உளுந்தூர்பேட்டையில் நடந்த விற்பனை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது...!!கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்.