மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சிறப்பு பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் விவசாயப் பெருமக்களின் நலனைக் காக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டில் திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான சம்பா மற்றும் சிறப்பு பருவ நெல் பயிர்களைப் பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இயற்கை இடர்பாடுகள், பருவநிலை மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத பேரிடர்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைத் தவிர்ப்பதற்காக இந்தத் திட்டம் அரணாக அமையும் என சொல்லப்பட்டுள்ளது.