Cyclone Arnab: எதிர்பார்த்ததை விட அர்னாப் புயல் ருத்தரதாண்டவம் ஆடியுள்ளது. பல்வேறு இடங்களில் 25 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் வலுப்பெற்று, மேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அர்னாப் புயலாக வலுப்பெற்றது. தற்போது இது அதி தீவிர புயலாக மாறியதை அடுத்து 140 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.